விவசாயிகளிடமிருந்து அதிக்கூடிய வரையிலான நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

விவசாயிகளிடமிருந்து அதிக்கூடிய வரையிலான நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்

விவசாயிகளிடமிருந்து ஆகக் கூடியவகையில் 5000 கிலோ வரையிலான நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி அரிசிக்காக நியாயமான சந்தை விலையொன்றை முன்னெடுப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணத்தை வழங்கும் நோக்கிலேயே இந்த செயற்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் அபிவிருத்தி மூலலோபய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சருமான மலிக் சமரவிக்ரம ஆகியோர் கூட்டாக சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]