விழிப்புணர்வை ஏற்படுத்த மேலாடையின்றி பாடிய செரினா.. வீடியோ உள்ளே…

விழிப்புணர்வை ஏற்படுத்த மேலாடையின்றி பாடிய செரினா.. வீடியோ உள்ளே…

டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மார்புக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மேலாடையின்றி பாட்டு பாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக அக்டோபர் மாதம் கருதப்படுகிறது.

எனவே இதனை முன்னிட்டு அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியமஸ், மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பாடல் ஒன்றை பாடி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

‘ஐ டச் மைசெல்ப்’ பாடலை பாடி பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ‘பெண்கள் தங்கள் மார்பகங்களை கையால் அவ்வப்போது சோதனை செய்து சோதனை செய்தாலே ஏராளமானவர்களின் உயிரை காக்க முடியும்’ என்று குறிப்பிட்டுள்ள செரீனா வில்லியமஸ், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி செய்தேன். வரும்முன் காப்பதே நல்லது என தெரிவித்துள்ளார்.

செரீனாவின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகிற நிலையில், அவர்களுடைய ரசிகர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து செய்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த வீடியோவை செரீனா வில்லியம்ஸ் பதிவிட்ட 10 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ‘ஐ டச் மைசெல்ப்’ பாடலை ஆஸ்திரேலியாவின் டிவின்ல்ஸ் என்பவர் எழுதியுள்ளார். அவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மார்கப்புற்றுநோயால் 53 வயதில் இறந்துவிட்டார்.

எனினும் இந்த பாடலைதான் செரீனா தனது இரு கரங்களையும் தனது மார்பில் பதித்து பாடியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

விழிப்புணர்வை ஏற்படுத்த

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]