விலைபேசும் கேவலமான அரசியலை தவிர்த்து உடனே பாராளுமன்றத் தேர்தலை நடத்துங்கள் – நஸிர் அஹமட்

விலைபேசும் கேவலமான அரசியலை தவிர்த்து உடனே பாராளுமன்றத் தேர்தலை நடத்துங்கள் – நஸிர் அஹமட்

இலங்கை அரசியலின் தற்போதைய நிலைமைகள் மிகக் கேவலமாக இருக்கின்றன. ஐனாதிபதி மேற்கொண்ட தவறான நகர்வை மூடிமறைப்பதற்காகத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் தவறான வழிமுறைகள் விலைபேசும் அரசியலை அறிமுகப்படுத்தியுள்ளன. இவை நாகரீகமற்ற அரசியல் கலாசாரங்களைத் தோற்றிவித்துள்ளன. எனவே உடனடியான பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதே சாலச்சிறந்தாகும்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தற்போதைய அரசியல் களநிலவரத்தின்படி ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வீ.பீ ஆகிய கட்சிகள் பாராளுமன்றத்தை கூட்டுமாறு கேட்டிருக்கின்றன. இந் நிலையில் பெரும்பான்மை கோரிக்கையை ஏற்று பாராளுமன்றத்தை கூட்டும் முடிவை சபாநாயகர் எடுக்க வேண்டும். இதற்கு ஜனாதிபதி இடம் கொடுப்பாரா என்பதும் கேள்விக்குரிய ஒன்றாக இருக்கிறது.

சட்டமா அதிபர் திணைக்களமும், உயர் நீதிமன்றமும் கூட பெரும் சவால்களைச் சந்தித்துள்ள நேரம் இது. இதுமட்டுமின்றி சர்வதேச நாடுகள் நேரடியாக இலங்கை அரசியலில் தலையீடு செய்ய ஆரம்பித்துள்ளன.

மக்கள் பிரதிநிதிகளைப் பணம் கொடுத்து- பதவி கொடுத்து வாங்கி தத்தமது பெரும்பான்மையை நிரூபித்துவிடலாம் என்ற முனைப்புகளும் தொடர வழிபிறந்துள்ளன. இத்தகைய நிலைமைகள் தொடர்ந்தால் அவை எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, தற்போதை அரசியல் சதிராட்ட நிமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உடனடியாக பாராளுமன்றத்ததை கலைத்து மக்களின் முடிவை அறிய பொதுத்தேர்தல் ஒன்றுக்குச் செல்வதே சிறந்தது என நான் கருதுகின்றேன் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]