விறகு வெட்டச்சென்ற 58 வயதுடைய பெண் சடலமாக மீட்பு!!

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம வெஸ்ட் 03 பிரிவு தோட்டத்திலுள்ள தேயிலை மலையில் இருந்து பெண்ணின் சடலம் டயகம பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வீட்டு தேவைக்காக விறகு வெட்டச்சென்ற ஒரு பிள்ளையின் தாயான சுந்தரலிங்கம் மல்லிகா என்ற 58 வயதுடையவர் என இணங்காணப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டயகம பிரதேச வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தமைக்கான காரணம் மற்றும் மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]