விரைவில் வெளியாகும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 வெளியீட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்டபோன் அடுத்த மாதம் வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கௌ டாங்சென் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
புதிய ஃபேப்லெட் குறிப்பிட்ட வெளியீட்டு திகதியை குறிப்பிடவில்லை என்றாலும் இந்த சாதனம் ஆகஸ்டு 23ஆம் திகதி நியூ யார்க் நகரில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் இரண்டு பதிப்புகளாக வெளியிடப்பட இருக்கும் கேலக்ஸி நோட் 8 முதற்கட்டமாக அமெரிக்கா, கொரியா மற்றும் லண்டனில் செப்டம்பர் மாத துவக்கத்தில் வெளியிடப்படும் என இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய ஃபேப்லெட் அக்டோபர் மாதம் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்
* 6.3 இன்ச் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
* கார்னிங் கொரில்லா கிளாஸ்
* ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் அல்லது எக்சைனோஸ் 8895 சிப்செட்
* 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
* 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
* டூயல் பிரைமரி கேமரா
* 3300 எம்.ஏ.எச். பேட்டரி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]