விரைவில் திருமணம் செய்யப்போரிங்களா? அதற்கு முன் உங்கள் துணையிடம் இவற்றை கேளுங்கள்!

திருமணத்திற்கு முன் நமக்குள் இருக்கும் பல சந்தேகங்களை முன்கூட்டியே கேட்டுக் கொள்ளாததால்தான் திருமணத்திற்குப் பின்னான ஏமாற்றம் விவாகரத்தை நோக்கி நகர வைக்கிறது. அப்படிக் கேள்வி கேட்க வாய்ப்புகள் கிடைத்தாலும் என்ன கேட்பது என்ற குழப்பமும் இருக்கிறது. கவலையே வேண்டாம். தெளிவான முடிவுக்கு துணையிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்.

உங்களுக்கு ஏதேனும் பொருளாதார இலக்கு இருக்கிறதா ?
இது உங்கள் துணையின் நீண்ட கால இலக்கை தெரிந்து கொள்ள உதவும். அதன் மூலம் அவரின் வாழ்க்கை முறையை கண்டறிய முடியும். அதற்கு ஏற்ப உங்களுடைய வாழ்க்கை முறையோடு அவர் ஒத்துப் போவாரா என தெரிந்து கொள்ளலாம். பொருளாதார ரீதியிலும் உங்கள் உறவு முறையை வலுபடுத்திக் கொள்ளலாம்.

உங்களுக்கு ஏதேனும் கடன்கள் இருக்கின்றனவா ?
உங்கள் துணைக்கு ஏதேனும் கடன் இருக்கிறதா என்ற கேள்வி மிக முக்கியமானது. இதுதான் அவரின் பொருளாதாரக் கையாளுகையை நிர்ணயிக்கும். அப்படி கடன் இருந்தால் எவ்வளவு இருக்கிறது என்றும் தெரிந்து கொள்ளுங்கள். அதை திருப்பிச் செலுத்த ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா? எவ்வாறு அதை அடைத்துக் கொண்டு வருகிறார்? அவரின் வருமானத்தை மீறிய கடனாக இருக்கிறதா? என்ற சந்தேகங்களுக்கெல்லாம் விடையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் அது உங்கள் இருவருடைய வாழ்க்கை பயணத்தை கடுமையாக பாதிக்கும்.

எதிர்காலத் திட்டங்கள் என்ன ?
அதாவது, துணை மேற்கொண்டு படிக்க விரும்புகிறாரா, வேலையை விடவோ, மாறவோ முயற்சி செய்கிறாரா ? புதிதாக வீடு, கார் வாங்க எண்ணம் இருக்கிறதா ? அது சராசரி வாழ்க்கை முறையை பாதிக்காத அளவு இருக்குமா போன்ற கேள்விகளையும் கேட்டுக் கொள்ளுங்கள். குறிப்பாக அவரின் வருமானத்தை நம்பிதான் குடும்பம் இருக்கிறதா? இதை நீங்கள் எவ்வாறு எதிர் கொள்கிறீர்கள்? நானும் அதற்கு பங்களிக்க வேண்டுமா? என்பதையும் கேட்டுக் கொள்ளுங்கள்.

எந்த விஷயத்திற்கு அதிகம் செலவிடுவீர்கள் ?
தினசரி செலவுகளைத் தாண்டி அவர் அதிகமாக எந்த விஷயத்திற்கு செலவிடுகிறீர்கள் என்ற கேள்வியும் அவசியம். ஷாப்பிங் , பப், கேம்ப்ளிங், கிளப், பெட் மேட்சுகள் என எந்த விஷயத்திற்கு அதிகமாக செலவிடுவார் என்று கேளுங்கள். அந்த செலவு உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் முடிவெடுங்கள். இல்லையெனில் சரியான தீர்வு காணுங்கள்.

மாத வருமானம் என்ன ?
இது குறித்த கேள்வி எழுப்பினாலே நிச்சயம் சற்று சங்கடத்தை ஏற்படுத்தும். இது இருவரும் பொருளாதார ரீதியாக எந்த அளவு உறுதுணையாக இருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இதனால் வாழ்கையை எவ்வாறு வாழலாம் என்கிற ஐடியா கிடைக்கும். வீட்டின் பொருளாதாரத் தேவையை எப்படி சமாளிக்கலாம் என்கிற ஐடியா கிடைக்கும்.

இருவரும் இணைந்து பொருளாதாரத் தேவைகளை எப்படி எதிர்கொள்ளலாம் ?
பொருளாதார ரீதியாக உங்களுக்கு ஏதேனும் திட்டங்கள் இருந்தால் அதை வெளிப்படுத்த சரியான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எவ்வாறு சேமிப்புகளை அதிகரிக்கலாம் என்று இணைந்து திட்டமிடுங்கள். இதனால் அதுபோன்ற குழப்பங்களும் திருமணத்திற்குப் பின் தவிர்க்கலாம். சரியான பாதையில் தெளிவாக இலக்கை நோக்கி பயணிக்கலாம்.

சரியான முடிவெடுங்கள் :
பணம் உறவை உருவாக்கவும் செய்யும், முறிக்கவும் செய்யும். பணம்தான் உங்கள் வாழ்க்கை பயணத்தை இனிமையாகத் தொடர மிகப்பெரிய ஆளுமையாக இருக்கப் போகிறது. அதை எப்படி சரியாக எதிர்கொள்வது, கையாளுவது என்கிற தெளிவு இருந்தால் வாழ்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உறுதி. மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதில்கள் அனைத்திலும் நீங்கள் திருப்தியாக உணர்ந்தால் அவர் உங்களுக்கு பொருத்தமான துணை. அதனால் தெளிவாக யோசித்து வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குங்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]