விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்ட இருவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

வாதுவ கடற்கரை விருந்தகம் ஒன்றில் நேற்றிரவு இடம்பெற்ற விருத்து உபசாரத்தின் போது ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் உயிரிழந்தனர்.

விருந்துபசாரத்தின் போது திடீர் உடல்நல குறைவு காரணமாக 4 பேர் பாணந்துரை மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் இருவரே உயிரிழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 20 மற்றும் 36 வயதுகளை உடையவர்கள் என மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இந்த மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]