விருது காணாமல் போன சம்பவம் குறித்து விசாரணை

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸிற்கு கிடைத்த Golden Peacock விருது காணாமல் போன சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அவருடைய வீட்டில் இருந்த குறித்த விருது, நேற்று நடைபெற்ற அவருடைய இறுதிக்கிரியையின் போது காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், CCTV காட்சிகளை கொண்டு குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]