முகப்பு News Local News விருட்சம் மாதிரிக் கிராமம் வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாஸாவினால் மக்களிடம் கையளிப்பு

விருட்சம் மாதிரிக் கிராமம் வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாஸாவினால் மக்களிடம் கையளிப்பு

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவின் சவுக்கடி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள விருட்சம் மாதிரிக் கிராமம் வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாஸாவினால் திங்கட்கிழமை (13) மக்களிடம் கையளிக்கப்;பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைiயில் நடைபெற்ற இந்நிகழ்வில் வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாஸா, பிரதியமைச்சர்களான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, அலி ஸாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன், உதவி உள்ளுராட்சி ஆணையாளர் கே.சித்திரவேல், பிரதேச செயலாளர்களான உ.உதயசிறிதர், ந.வில்வரெட்னம், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விருட்சம் மாதிரிக் கிராமத்தில் 29 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான உரிமைப் பத்திரம், அபிவிருத்தி செய்யப்பட்ட 29 காணிகளுக்கான அறுதி உறுதிப் பத்திரங்களும், பயனாளிகள் 192 பேருக்கும் வீடமைப்பு உதவிக் காசோலைகள், பயனாளிகள் 75 பேருக்;கு “சொந்துருபியச” எனும் திட்டத்தின் கீழ் தலா 2 இலட்ச ரூபாய் வீடமைப்புக் கடன்;, பயனாளிகள் 200 பேருக்;கு “விசிரி” திட்டத்தின் கீழ் தலா ஒரு இலட்ச ரூபாய் இலகு கடனுக்கான காசோலை வழங்கப்பட்டன. இலவச கண் கண்ணாடிகள் வழங்கல் என்பனவும் நடைபெற்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com