விராட் கோலி தனது மனைவியுடன் உடற்பயிற்சி செய்யும் வைரல் வீடியோ உள்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவியுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்வர்தன் சிங் ராத்தோர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டார். அதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, ரித்திக் ரோஷன் மற்றும் சாய்னா நேவால் ஆகியோரை டேக் செய்து அவர்களுக்கு ‘பிட்னஸ் சவால்’ விடுத்தார்.

அவரின் சவாலை ஏற்றுக்கொண்ட விராட் கோலி தன் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு, தன் மனைவி அனுஷ்கா சர்மா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு சவால் விடுத்தார்.
கோலியின் பிட்னஸ் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக ட்விட்டரில் அறிவித்தார் பிரதமர் மோடி. மோடியில் அறிவிப்புக்குப் பின் இந்த பிட்னஸ் சவால் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]