வியாபார நிலையத்தில் தீ விபத்து

புளத்சிங்கள கலவெல்லாவ பாலத்துக்கு அருகில் உள்ள வர்தக நிலையத்தில் இன்று (28) அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து காரணமாக குறித்த வர்த்தக நிலையத்துக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அங்கிருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

ஹொரனை தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.