வியாபாரத்திலும் மோதிக்கொள்ளும் சர்கார் மற்றும் விஸ்வாசம்

வியாபாரத்திலும் மோதிக்கொள்ளும் சர்கார் மற்றும் விஸ்வாசம்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை அடிக்கடி தல –தளபதி ரசிகர்களின் மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

இதில் அவர்கள் இருவருடைய படங்களில் எந்த படம் திரைக்கு வந்தாலும் ரசிகர்களுக்கிடையில் கடும் போட்டி நிலவும்.

அந்தவகையில் நம்ம தளபதி விஜய்யின் சர்கார் படத்திலும், அஜித் விஸ்வாசம் படத்திலும் பிஸியாக நடித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், சர்கார் மற்றும் விஸ்வாசம் படங்களுக்கு இடையே கடும் போட்டிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு படத்தின் பட வியாபாரமும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், செங்கல்பட்டில் இரண்டு படங்களின் வியாபாரமும் முடிந்துவிட்டதாகவும், அதில் சர்கார் ரூ. 15 கோடிக்கும், அஜித்தின் விஸ்வாசம் ரூ. 12 கோடிக்கும் விலைபோனது குறிப்பிடத்தக்கது.

எனவே இதில் எந்த படங்கள் திரைக்கு வந்தாலும் அது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]