விமான சேவைகளில் தாமதம்

பல்வேறு காரணங்களால் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சில விமான சேவைகள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் கொச்சின், சென்னை மற்றும் சவூதி அரேபியாவுக்கு புறப்பட்டு செல்லவிருந்த விமான சேவைகளில் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 7.35 மணிக்கு இந்தியாவின் கொச்சின் நோக்கி செல்லவிருந்த இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 165 விமானம் மதியம் 12.30 மணிக்கு தாமதித்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

அதேபோல, சென்னைக்கு காலை 8.35 மணிக்கு செல்லவிருந்த இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 129 என்ற விமானம் இன்று முற்பகல் 10.10 மணியளவில் தாமதித்து பயணத்தை ஆரம்பித்துள்ளது.

சவூதி அரேபியாவுக்கு இன்று பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு செல்லவிருந்த இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 281 என்ற விமானம் இன்று மாலை 5.05 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]