விமானி அபிநந்தன் தந்தைக்கு ஆறுதல் கூறிய கமல்ஹாசன்

விமானி அபிநந்தன் தந்தையிடம் போனில் ஆறுதலாக பேசியுள்ளார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்.

புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய விமானப்படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் பால்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது.

அதனைத் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் எஃப்16 போர் விமானம் நேற்று அத்துமீறி நுழைந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும்போது இந்திய விமானப்படையின் மிக்16 ரக விமானம் பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் கிராமத்தில் விழுந்தது.

அதில் இருந்த விமானி அபிநந்தன் (தமிழகத்தை சேர்ந்தவர்) அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அபிநந்தனின் தந்தை வர்த்தமானை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உங்கள் மகன் இந்த நாட்டுக்கு செய்திருக்கும் பணி உன்னதமானது.

போர் தர்மம் அறிந்த, புரிந்த வீரர்கள் அங்கும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. எனவே அபிநந்தன் நலமாக வீட்டுக்கும், நாட்டுக்கும் திரும்புவார் என ஆறுதல் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]