விமானப்படைத் தளபதியின் சேவை நீடிப்பு

விமானப்படைத் தளபதி

விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதிக்கு சேவை நீடிப்பு வழங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

விமானப்படைத் தளபதி கடந்த மே 25 ஆம் நாளுடன் ஓய்வுபெறவிருந்தார். இந்த நிலையிலேயே அவருக்கு ஒரு ஆண்டு சேவை நீடிப்பை வழங்கப்பட்டுள்ளது.

முப்படைகளின் தளபதி என்ற வகையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதன் மூலம், அடுத்த ஆண்டு மே 25 ஆம் நாள் வரை, விமானப்படைத் தளபதியாக, எயர் மார்ஷல் கபில ஜயம்பதி பணியாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]