விமானத்தை தொடர்ந்து ராட்சத பலூன்களில் உலகத்தை வலம்வரப் போகும் ரஜினி

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்திற்கு இதுவரை இந்திய சினிமாவில் எந்தவொரு படத்திற்கும் இல்லாத அளவுக்கு விளம்பரங்கள் செய்யப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வரிசையில் தற்போது ரஜினி நடித்துள்ள ‘2.ஓ’ படத்திற்கும் பிரம்மாண்ட அளவில் விளம்பரங்கள் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

லைக்கா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், படத்திற்கான விளம்பரங்கள் இதுவரை தொடங்கப்படவே இல்லை.

விமானத்தை

அடுத்த வருடம் ஜனவரியில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் விளம்பரத்தும் பணிகளை தொடங்கவுள்ளதாக லைக்கா நிறுவனம் தலைமை செயல் நிர்வாகி ராஜு மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

வெப்பக்காற்று அடங்கிய 100 அடி உயர பலூனில் 2.ஓ படத்திற்கான விளம்பரங்கள் இடம்பெறப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், அந்த பலூனை உலகமெங்கும் நடைபெறும் பலூன் திருவிழாவில் பறக்கவிடப் போகிறார்களாம்.

8 மாதங்களுககு முன்பே 100 அடி உயர வெப்பக்காற்று பலூனுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார்களாம். வரும் செவ்வாய் கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் ஹாலிவுட் விளம்பரத்தில் இந்த பலூனை பறக்கவிடப் போகிறார்களாம்.

மேலும், லண்டன், துபாய், சான்பிரான்சிஸ்கோ, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் தெற்காசிய நாடுகளிலும் இந்த பலுனை பறக்கவிடப் போகிறார்களாம். இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் இந்த வெப்பக்காற்று பலுனை கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம். நாடு முழுவதும் உள்ள பிரபல திரைப்பட நட்சத்திரங்கள் இந்த பலூனில் சவாரி செய்யப்போவதாகவும் கூறப்படுகிறது.

2.ஓ படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். எமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.