மது போதையுடன் விமானத்தை செலுத்த முயன்ற விமானிக்கு சிறைத் தண்டனை

கனடாவில் மது போதையுடன் பயணிகள் விமானத்தை செலுத்த முயற்சித்த விமானி ஒருவருக்கு 8 மாதச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.விமானத்தை செலுத்த

சண்விங் எயர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானி ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி கல்கரியில் இருந்து வின்னிபெக்கின் றெஜீனா ஊடாக மெக்சிக்கோவுக்கு பயணத்தை மேற்கொள்வதற்கு தயாரான விமானத்தி்னை செலுத்திச் செல்வதற்கு ஆயத்தமாகியிருந்தார்.

எனினும் அவர் தடுமாற்றத்துடன் காணப்பட்டதுடன், அவரின் நடத்தையிலும் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், முறைப்பாடு செய்ய்பட்டதை அடுத்து, அவர் போதையில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இறுதி நேரத்தில் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டதுடன், அந்த வழக்கின் விசாரணையில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்க்பபட்ட நிலையில், அவருக்கு எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த அந்த 37 வயதான Miroslav Gronych என்ற விமானி ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவர் வேலை அனுமதி விசாவில் கனடாவில் பணியாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]