விமல் வீரவன்ச உண்ணாவிரதத்தை கைவிட்டார்

விமல் வீரவன்ச உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர தெரிவித்துள்ளார்.

பௌத்த மதகுருமார்கள் விடுத்த கோரிக்கைக்கு அமையவே விமல் வீரவன்ச பால் அருந்தி உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக ஜயன்த சமரவீர கூறினார்.

விமல் வீரவன்ச
விமல் வீரவன்ச

நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடந்த ஒருவார காலமாக சிறைச்சாலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார்.

அவரின் உடல் நிலை மோசமடையவே நேற்றைய தினம் சிறைச்சாலைகள் வைத்திய அதிகாரி தேசிய வைத்தியசாலைக்கு அவரை மாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]