விமல் வீரவங்சவின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவின் பிணை கோரிய மேன்முறையீட் மனுவை எதிர்வரும் 7ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வீரவங்சவின் பிணை கோரிய மேன்முறையீட் மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதிலும் வழக்கை விசாரணை செய்யும் இரண்டு நீதியரசர்களில் ஒருவர் சமூகமளிக்காத காரணத்தால் மேற்படி வழக்கு 7ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

விமல் வீரவங்சவின்

மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள சட்டமா அதிபரை எதிர்வரும் 7ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது. கோட்டை நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றம் என்பன பிணை வழங்க மறுத்தமை சட்டத்திற்கு முரணானது எனவும் தனக்கு பிணை வழங்குமாறும் கோரி விமல் வீரவங்ச இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தி, அரசுக்கு 9 கோடி ரூபாவுக்கும் மேல் நஷ்டத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் வீரவங்ச கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்படடார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]