விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

                 விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

விமலுக்கு

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கு விசாரணை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துள்ளப்பட்டது.

கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் தொடரப்பட்டிருந்த குறித்த வழக்கு விசாரணைக்கு விமல் வீரவன்ச சமூகமளிக்கவில்லை.

நாடாளுமன்ற அமர்வு காரணமாக அவருக்கு சமூகமளிக்க முடியாமல் போனதாக விமல் வீரவன்ச தரப்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அதன்படி அடுத்த வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கும் போது இன்றைய தினம் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டமைக்கான நாடாளுமன்ற செயலாளரின் கடிதம் ஒன்றை கொண்டு வரவேண்டும் என கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த வழக்கு எதிர்வரும் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்த நீதவான், அன்றைய தினத்தில் குறித்த 7 சந்தேக நபர்களுக்கும் குற்றப்பத்திரிகை சமர்பிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாளர் செயித் அல் ஹுசைனின் இலங்கை வருகையை எதிர்த்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமை தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]