விமலின் முடிவு சிறுபிள்ளைத்தனமானது

அதிகாரப்பகிர்வு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியானது அரசமைப்பு நிர்ணய சபையிலிருந்து வெளியேற எடுத்துள்ள முடிவானது சிறுபிள்ளைத்தனமானது என்று அரசமைப்புச் சபையின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும் ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்..

நேற்று அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வீடுகளிலுள்ள சிறுபிள்ளைகள் பற்றி பெரியவர்கள் விழிப்பாகவே இருப்பார்கள். ஏனெனில், அவர்கள் மீதான கவனம் திசைதிரும்பும் பட்சத்தில், விளையாட்டுப்பொருளை கீழே அடித்துவிடுவார்கள். அது சிறுபிள்ளைத்தனம். எனவே, தேசிய சுதந்திர முன்னணியின் முடிவும் இதற்கு ஒப்பானதொன்றே. அது பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

நாட்டுக்குப் புதியதொரு அரசமைப்பு அவசியம். அதை இயற்றும்போது 3 பிரதான விடயங்கள் தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை பற்றி கருத்தாடல்கள் இடம்பெற்றன.

புதிய தேர்தல் முறைக்கு சகலஅரசியல் கட்சிகளும் 80 சதவீதமான இணக்கப்பாட்டுக்குள் வந்துவிட்டன. விரைவில் முழு சம்மதமும் கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம்.

அடுத்ததாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு பெரும்பான்மையான கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், ஓரிரு கட்சிகள் இந்த விவகாரம் பற்றி தொடர்ந்தும் கலந்துரையாடல் மட்டத்தில் இருக்கின்றன.

விமலின் முடிவு

வழிநடத்தும் குழுக் கூட்டத்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை. அத்துடன், ஒற்றையாட்சி,பௌத்த மதம் தொடர்பான சரத்துகள் பற்றி எந்தவொரு பேச்சும் இல்லை. அவை அப்படியே நிலையானதாக இருக்கும். எனவே, அந்த விடம் பற்றி கதைக்க வேண்டியதில்லை. நாட்டுக்குப் புதிய அரசமைப்பொன்று அவசியம். அதை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தவேண்டும் – என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]