காரின் கதவுடன் மோதுண்டு விபத்து

யாழ். கொடிகாமம் மீசாலைப் பகுதியில் பொலிஸாரின் காரினால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக வயோதிப பெண் உடல் சிதறி ஸ்தலத்தில் பலி.

இந்த விபத்துச் சம்பவம் இன்று (06.12) மாலை 4.45 மணியளவில் மீசாலைப் பகுதியில் உள்ள பழமுதிர்ச்சோலை கடைக்கு முன்பாக இடம்பெற்றது.

இந்த விபத்தில் பரமேஸ்வரி (வயது62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது பொலிஸாரின் கார் ஒன்றில் வந்தவர்கள்
வீதியில் நின்றவாறு காரின் கதவை திறந்துள்ளனர். அந்த வேளை பின் புறமாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் எதிர்பாராதவாறு காரின் கதவுடன் மோதுண்டு கீழே விழுந்த போது அந்த வீதி வழியாக வந்த டிபர் இருவர் மீதும் ஏறியுள்ளது. இதன்போது மனைவி டிபருக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளார். கணவன் கால்கள் முறிந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.