விபத்து: சாரதி உள்ளிட்ட நால்வர் படுகாயம்

விபத்து

ஹட்டன் – போடைஸ் பிரதான வீதியின் பட்டல்கல பகுதியில் வீதியை விட்டு விலகிய ஆட்டோ, 50 அடி பள்ளத்தில் பாய்ந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாதில் சிறுவன் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போடைஸ் படல்கல பகுதியிலே நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

ஹட்டன் நோக்கி வந்த ஆட்டோ, சாரதியின் கட்டுப்பாட்டை மீறி காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பட்டல்கல ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஆட்டோ சாரதி மற்றும் அதில் பயணித்த 12 வயது சிறுவன் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]