விபத்தில் 7 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் பலி

எஹலியகொடை – தர்மபால வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி மற்றும் கெப் வாகனம் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 7 வயதான சிறுவன் மற்றும் 50 வயதான ஒருவரும் பலியாகியுள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கெப் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]