விபத்தில் வெளிநாட்டவர் இருவர் பலி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

கொட்டாவை – காலி அதிவேக நெடுஞ்சாலையில் 65 ஆவது மைல் கல் அருகில் இன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டவர்கள் சிலர் பயணித்த வேன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனுடன் ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

காயமடைந்த மூவர் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மற்றைய இருவரும் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காயமடைந்தவர்களில் இரண்டு சிறுவர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]