விபத்தில் மூவர் படுகாயம்

பதுளை – ஹாலி-எல பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து வெலிமடை ஊடாக பசறை நோக்கி பயணித்த வேன் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியுள்ளது.

அத்துடன், குறித்த வேன் 80 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஹாலி-எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]