விபத்தில் மூவர் படுகாயம்

படுகாயம்

விபத்தில் மூவர் படுகாயம்

மட்டக்களப்பு, செங்கலடி – பதுளை வீதி கொடுவாமடுவில் நேற்று வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரித்தனர்.

பன்குடாவெளியிலிருந்து செங்கலடி நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கில், காயன்குடாவிலிருந்து செங்கலடி நோக்கி பயணித்த துவிச்சகரவண்டியின் பின்புறத்தில் மோதி தனது கட்டுபாட்டை இழந்த நிலையில் எதிர்த் திசையிலிருந்து வந்த டிப்பர் ரக வாகத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பன்குடாவெளி குளனியைச் சேர்ந்த க.கணேஸ்வரன் (வயது 23), எஸ்.சிந்துஜன் (வயது 24), துவிச்சக்கர வண்டியில் பயணித்த அ.அரசரெத்தினம் (வயது 54) ஆகியோர் காயமடைந்த நிலையில் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிற்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசபரணைகளை நடத்தி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]