விபத்தில் பெண் பலி

கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் எஹலியகொட பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பஸ் ஒன்று முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில், எஹலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து, சிகிச்சை பலனின்றி கெடஹெத்தே பகுதியை சேர்ந்த 56 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், விபத்தில் படுகாயமடைந்த முச்சகரவண்டி சாரதி மேலதிக சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]