விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அம்பலாந்தோட்டை மிரிஜ்ஜவில் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரில் ஒருவரான முச்சக்கரவண்டி சாரதியே உயிரிழந்துள்ளார்.

உடதும்புர பிரதேசத்தைச் சேர்ந்த தம்மிக்க பண்டார விக்ரமசிங்க என்ற 37 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் அவருடன் படுகாயமடைந்த அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

திஸ்ஸ – மாத்தறை வீதியில் அம்பலாந்தோட்டை மிர்ஜ்ஜவில முச்சந்தியில் நேற்றுக காலை இந்த விபத்து ஏற்பட்டது.

கொழும்பில் இருந்து அம்பலாந்தோட்டை நோக்கிச் சென்ற பஸ் மற்றும் அம்பலாந்தோட்டை பகுதியில் இருந்து வந்த முச்சக்கரவண்டி என்பன மோதியே இந்த விபத்து ஏற்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]