விபத்தில் ஜேர்மன் தம்பதிகள் படுகாயம்

ஜேர்மன் தம்பதிகள்

ஹப்புத்தளை ‘லிப்டன் சீட்’ விடுதியை பார்வையிட்டு திரும்பிக் கொண்டிருந்த ஜேர்மன் நாட்டு தம்பதிகள் பயணித்த வாகனம், பாதையை விட்டு விலகி, விபத்துக்குள்ளாகியதில், அவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற இந்த விபத்தில் வாகன சாரதி வாகனத்திலிருந்து பாய்ந்து காயமடையாமல் தப்பியுள்ளார்.

படுகாயமடைந்த ஜேர்மன் நாட்டு தம்பதியினர், ஹப்புத்தளை அரச வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹப்புத்தளைப் பொலிஸார் இவ்விபத்து குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]