விபத்தில் சாரதி பலி

தம்புள்ளை – குருநாகல் வீதியில் கலேவெல பெலிகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ட்ரக்டர் மற்றும் லொறி என்பன மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் படுகாயமடைந்த ட்ரக்டர் சாரதி உயிரிழந்துள்ளதாக கலேவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலேவலயில் இருந்து பொதுஹெர நோக்கிய பயணித்த ட்ரக்டரை, பொலன்னறுவையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி முந்திச்செல்ல முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

கலேவல பகுதியை சேர்ந்த 46 வயதுடைய எம்.கிரிபண்டா என்ற நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், தம்புள்ளை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]