விபத்தில் கணவன் – மனைவி படுகாயம்

கணவன் - மனைவி

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் தனியார் பஸ் என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கினிக்தேனே பகுதியில் இருந்து கொட்டகலை ஸ்டொனிக்கிளிப் பகுதியை நோக்கி பயனித்த மோட்டார் சைக்கிள், ஹட்டனில் இருந்து நாவலபிட்டி பிரதேசத்தை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸுடன் மோதியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன், மனைவி ஆகியோரே படுகாயமடைந்ததுடன், அவர்களுடன் பயணித்த பிள்ளைக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த இருவரும் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கணவர், கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கும் மனைவி, நாவலவிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பஸ் சாரதி மது போதையில் அதிக வேகத்தில் பஸ்ஸை செலுத்தியமை காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் பஸ் சாரதியை கைதுசெய்துள்ளதாக கூறினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]