விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயம்

திஸ்ஸ – மாத்தறை வீதியில் அம்பலாந்தோட்டை மிர்ஜ்ஜவில முச்சந்தியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து அம்பலாந்தோட்டை நோக்கிச் சென்ற பஸ் மற்றும் அம்பலாந்தோட்டை பகுதியில் இருந்து வந்த முச்சக்கரவண்டி என்பன மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளானதையடுத்து, பஸ் மற்றும் முச்சக்கரவண்டி என்பன தீப்பற்றிக்கொண்டதுடன், இதன்போது முச்சக்கரவண்டியில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

தந்தை மகன் மற்றும் மகளின் பிள்ளைகள் இருவரே இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அம்பலாந்தோட்டை பெரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி முற்றாக தீயில் எரிந்து நாசமடைந்துள்ளது. இந்த விபத்தில் பஸ் பயணிகளுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

பஸ் சாரதி பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com