விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள சோகம்

அநுராதபுரம் -புத்தளம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொரகஹவேவ பிரதேசத்தில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதுண்டு குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மூவர், அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் பிரதேசத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்களே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதுடன், லொறியின் சாரதி அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.