விபத்தில் ஒருவர் பலி; அறுவர் படுகாயம்

கொழும்பு – வெல்லவாய வீதியில் மாரகொல்லிய பிரதேசத்தில் இரண்டு கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹுங்கம ஹாதாகல பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதுடைய நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இரண்டு பெண்கள் மற்றும் 7 வயது சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்தவர்களில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில், படுகாயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஹம்பாந்தோட்டையில் இருந்து தங்கல்லை நோக்கி வலது புறமாக பயணித்த கார், எதிரே பயணித்த மற்றுமொரு காரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]