விபத்தில் ஒருவர் படுகாயம்

பொகவந்தலாவையில் இருந்து மீரிகம பாதுகொட பகுதிக்கு பால் ஏற்றி சென்ற பௌசர் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பு புருட்வில் பகுதியில் ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிள் சாரதி படுகாயமடைந்த நிலையில், டிக்கோயா -கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .

இன்று காலை 11மணி அளவில் இடம் பெற்ற இந்த விபத்து, அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கள் , பௌசரில் மோதியதால் ஏற்பட்டது என, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வட்டவளை சென் எலியாட்ஸ் பகுதியை சேர்ந்த நபரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் மேலதிக சிகிச்சைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலதி விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]