விபத்தில் அதிபர் உட்பட மூவர் படுகாயம்

மூவர் படுகாயம்

ஹட்டன் – தலவாக்கலை பிரதான வீதியின் சென்கிளேயர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மேதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டனிலிருந்து பாடசாலை அதிபரொருவர் சென்ற மோட்டார் சைக்கிளும் தலவாக்கலை பகுதியிலிருந்து இருவர் பயணித்த மோட்டார் சைக்கிளுமே இன்று (26) காலை விபத்துக்குள்ளானதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமுற்ற மூவரும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]