விபச்சார தொழில் ஈடுப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பில் பீர் போத்தலை குத்தி கொலை -சந்தேக நபர் மூவர் கைது

விபச்சார தொழிலில் ஏற்பட்ட போட்டியே மெரினா கடற்கரையில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது.

கடற்கரையில் உள்ள நீச்சல் குளம் அருகில் மிகமிக கொடூரமான முறையில் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

பீர் போத்தலை அடித்து பெண்ணின் பிறப்புறுப்பில் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்ட பொலிஸார் பாலியல் தொழிலில் ஏற்பட்ட தகராறில் தான் இந்த கொலை நடந்திருக்கும் என்றும் சந்தேகம் வெளியிட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் 35 வயதுடைய இந்த பெண் மதுரையை சேர்ந்த கலைச்செல்வி என்றும் கல்யாணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தாய் என்றும் தெரியவந்தது.

இதனையடுத்து, பெண்ணின் கையடக்கத் தொலைபேசியை கொண்டு அடுத்தடுத்த விசாரணையில் பொலிஸார் மேற்கொண்ட போது, கலைச்செல்வி, புருஷனுடன் சண்டை போட்டு கொண்டு சென்னைக்கு வந்து இரண்டு மாதங்களாகிய நிலையில், பாலியல் தொழில் செய்வதனால் மெரினா கடற்கரைப் பக்கம் சுற்றித்திரிந்துள்ளார்.

இந்த வேளையில் தான் திருவல்லிக்கேணியை சேர்ந்த ஒட்டோ சாரதி வினோத்குமார் உள்ளிட்ட 3 பேரிடம் அடிக்கடி தொலைபேசியில் உரையாடி வந்துள்ளார்.

இதனையடுத்து மறுநாளே வினோத்குமார் உள்ளிட்ட 3 பேரை பொலிஸார் கைது செய்து, இவர்களிடம் 2 நாளாக விசாரணை நடத்தி வந்த போதிலும் இவர்கள்தான் கொலையாளி என்று உடனடியாக சொல்ல முடியவில்லை.

தற்போது தீவிர விசாரணைக்கு பின்னர் சாரதி பிரேம்குமாரும், அவரது நண்பர் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சூர்யா என்பவரும்தான் இவ்வளவு கோரமான கொலையை செய்தது என்று தெரியவந்துள்ளது.

தற்போது எதற்காக கலைச்செல்வியை கொலை செய்தீர்கள் என பொலிஸார் விசாரித்தபோது, பிரேம்குமார் அளித்த வாக்குமூலத்தில், கலைச்செல்வி மதுரையிலிருந்து மெரினாவுக்கு விபச்சாரம் செய்ய அடிக்கடி வந்து போவார்.

அவ்வாறு வரும்போதெல்லாம் எங்களை தான் அழைப்பாள். கலைச்செல்வியுடன் நாங்கள் தொடர்ந்து பழக்கம் வைத்து கொண்டோம். அப்போது கலைச்செல்வியுடன் மற்றொரு பெண் கூடவே வந்தாள். அவளை எங்களுக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது.

அதனால் ரொம்ப நெருக்கமாயிட்டோம். அப்போது ஒருநாள், ‘கலைச்செல்வி மதுரையிலிருந்து எப்ப சென்னை வந்தாலும், என் விபச்சார தொழில் கெட்டு போகுது’ என்று புலம்புவாள்.

இதனால் நாங்கள் கலைச்செல்வியுடனான தொடர்பை துண்டித்துவிட்டோம். ஆனால் கடந்த சனிக்கிழமை இரவு கடற்கரைக்கு வந்த கலைச்செல்வி வழக்கம் போன்று எங்களை கூப்பிட்டாள். நாங்களும் போனோம். எல்லோருமாக சேர்ந்து குடித்தோம். அப்புறம் எல்லாருமே சந்தோசமாக இருந்தோம்.

பின்னர் ஏன் என்கிட்ட முன்னமாதிரி இருப்பதில்லை என்று பேச்சை ஆரம்பிச்சாள் கலைச்செல்வி. நாங்கள் ஏதேதோ காரணம் சொன்னோம். ஆனால் விடாப்பிடியாக இதையே கேட்டு கேட்டு தொந்தரவு பண்ணினாள்.

ஏற்கனவே போதையில் இருந்த நாங்கள் பக்கத்திலிருந்த பீர் போத்தலை எடுத்து கலைச்செல்வியை அடிச்சோம். அவள் வாயிலும், மூக்கிலும் மணலை அள்ளி போட்டோம்.

ஆனா தலையில அடிச்சப்பவே அவள் இறந்துவிட்டாள். அவள் உடலை எங்க தூக்கிட்டு போறதுன்னு தெரியல. எங்க கொண்டு போனாலும் மாட்டிப்போம்னு நினைச்சு அங்கயே கொஞ்சமா குழியை தூண்டி உடலை போட்டோம்.

எங்களுக்கு இருந்த பயம், பதட்டத்தில் குழியை ரொம்ப ஆழமா வெட்டாம விட்டுட்டோம். அதான் இப்படி மாட்டிக்கிட்டோம்’ என்றனர். இதனையடுத்து, கைதான 2 பேரையும் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]