விபசார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10 பெண்கள் கைது

கொழும்பு, கொம்பனிவீதியில் விபசார நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், குறைந்தது 10 பெண்கள் வரை, நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள பெண்கள், 29 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் ஹம்பாந்தோட்டை, வெயாங்கொட, சீதுவ, மதுகம, றாகம, அளுத்தரகம, மெத்தெனிய, லிதுல, ஹந்தபன்கொட, திஸ்ஸமஹாராம மற்றும் கிருலப்பனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கொழும்பு மத்திய பிரதேச சட்டம் அமுலாக்கல் பிரிவினர் நடத்திய திடீர் சோதனையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.