முகப்பு Cinema விநாயக சதுர்த்தியை முன்னிட்டு விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் விஜயின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.

இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படங்களை பகிர்ந்து விஜய் ரசிகர்களை குஷி படுத்திவருகிறது.

இந்நிலையில் ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து விஜய், அட்லி இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருப்பதாகவும் சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகியிருந்தன.

தற்போது இந்த படம் குறித்து அறிவிப்பு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com