விநாயகர் சதுர்த்தி அன்று ரஜினியுடன் மோதும் விஜய்

விநாயகர் சதுர்த்தி அன்று ரஜினியின் 2.0 மற்றும் விஜயின் சர்கார் படங்களின் டீசர் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் ‘2.0’. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் உள்ளது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதியை பல முறை மாற்றியதே அதற்கு காரணம். இந்த படத்தில் பல புதிய கிராபிக்ஸ் யுக்திகளை ஷங்கர் பயன்படுத்தியுள்ளார். அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இப்படத்தின் டீசரை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கும் இந்த சமயத்தில் புதியதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. விநாயகர் சதூர்த்தி தினமான செப்டம்பர் 13ம் தேதி அன்று இப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க மற்றொரு தகவலாக விஜய் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் படம் ‘சர்க்கார்’ படத்தின் பாடல் வெளியாகும் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த மகிழ்ச்சியில் இருந்து ரசிகர்கள் வெளி வருவதற்குள் இப்படத்தின் டீசர் குறித்த செய்தி கிடைத்துள்ளது. அதன்படி விஜய் பட டீசரும் விநாயகர் சதூர்த்தியன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் மூன்றாவது படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த முறை விநாயகர் சதூர்த்தியன்று இரண்டு பெரிய ஹீரோக்களின் படத்தின் டீசர் வெளியாகும் பட்சத்தில் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் உறுதி தான்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]