முகப்பு News விநாயகர் சதுர்த்தி அன்று 3Dயில் 2 பாயிண்ட் O டீசர்

விநாயகர் சதுர்த்தி அன்று 3Dயில் 2 பாயிண்ட் O டீசர்

சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அனைவரும் எதிர்பார்க்கும் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் 2 பாயிண்ட் O டீசர் வரும் செப்டம்பர் 13 விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், நடித்துள்ள 2 பாயிண்ட் O படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹமான்.
இந்தியா மற்றும் வெளிநாடுகிளில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 3D திரையரங்குகளில் 3D தொழில்நுட்பத்தில் டீசர் திரையிடப்படவுள்ளது. அதிபிரம்மாண்டமான 2 பாயிண்ட் O படத்தின் டீசரை நீங்கள் 3D யில் பார்ப்பதற்காக கடின உழைப்பு போடப்பட்டு வருகிறது. இப்படத்தின் டீசரை நீங்கள் 3D யில் பார்ப்பது உங்களுக்கு புதிய மற்றும் மகத்தான அனுபவமாக இருக்கும்.
இந்தியா மற்றும் வெளிநாடுகிளில் உள்ள எந்தெந்த திரையரங்குகளில் 2 பாயிண்ட் O டீசர் 3D தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்ற விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.
3D யில் வெளியாகும் அதே நேரத்தில், யூடுபிலும், 2D திரையரங்குகளில் 2D தொழில்நுட்பத்திலும் 2 பாயிண்ட் O டீசர் திரையிடப்படவுள்ளது.
இன்னும் 4 தினங்களில் புதிய பரிணாமத்தில் 2 பாயிண்ட் O படத்தின் டீசரை ரசிக்க தயாராகுங்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com