வித்யா படுகொலை வழக்கில் காவல்துறை அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுத்தவரின் விளக்கமறியல் நீடிப்பு

வித்யா படுகொலை வழக்கில் காவல்துறை அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுத்தவரின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கில், தம்மை கைதுசெய்த காவல்துறை அலுவலருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தவரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஊர்காவற்றுறை நீதவான் வை.எம்.எம்.ரியாஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வித்யா கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்த பூபாலசிங்கம் இந்திரகுமார் விடுதலை செய்யப்பட்டார்.

எனினும், தம்மை கைது செய்த காவல்துறை அலுவலருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேகத்துக்குரியவர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, அவரை விடுவிக்குமாறு கோரியிருந்தார்.

எனினும், நீதிமன்ற நடவடிக்கைகளை மதித்து நடக்குமாறு அவருக்கு ஏற்கனவே பணிக்கப்பட்டிருந்தாகவும், ஆனால் அதனை அவர் பின்பற்றவில்லை என்றும் நீதவான் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த வழக்கு எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்னும், அதன்போது வழக்கு தொடர்பான கட்டளை பிறப்பிக்கப்படும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]