வித்யா கொலை வழக்குக்கான இறுதித் திகதி அறிவிப்பு!

வித்யா கொலை வழக்கு க்கான இறுதித் திகதி அறிவிப்பு. யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவியான வித்யா கொலை செய்யப்பட்டதற்கான தீர்ப்பானது இந்த மாதம் 27ந் திகதி வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்யா கொலை வழக்கு

இக்கொலை வழக்கானது ட்ரையல் அட்பார் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கு தொடர்ந்தவர்களின் சாட்சியும், இன்று எதிர்தரப்பு சாட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாட்சியங்கள் பெறப்பட்டதின் பின் தீர்பாயமானது வரும் 27ந் கூடும் எனவும் அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வித்யா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது சந்தேக நபர்களில், முதலாவது மற்றும் ஒன்பதாவது நபர்களைத் தவிர மற்றவர்களின் குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளதாக கொலை வழக்கின் தொகுப்புரையில் பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் குமார் ரத்னம் தெரிவித்திருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]