வித்தியா கொலை : மாவை சேனாதிராஜா உட்பட 6 பேரிடம் வாக்குமூலம்

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொலை தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உட்பட 6 பேரிடம் வாக்குமூலத்தைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எம்.றியால், நேற்று (22) உத்தரவிட்டார்.

புங்குடுதீவு மாணவியின் கொலைச் சம்பவம் தொடர்பில், சுவிஸ்குமார் என, அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பிக்க உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிமன்ற உத்தரவுக்கமைய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் பெற்றுக் கொண்ட வாக்குமூலத்தை மன்றில் சமர்ப்பித்தனர்.