வித்தியா கடத்தப்பட்டதில் இருந்து தீர்ப்புவரை பதித்த தடையங்கள்

வித்தியா கொலை வழக்கின்13.05.2015 – புதன்கிழமை

மாணவி வழமை போன்று காலை வீட்டிலிருந்து பாடசாலை புறப்பட்டுச் சென்றாள். ஆனாலும் பாடாசலையில் முடிந்து அவள் வீடு திரும்பவில்லை. மாலையில் இருந்து அவளை குடும்பத்தினர் தேடுகின்றார்கள்.

14.05.2015 – வியாழக்கிழமை
காலையிலும் அவளை தேடுகின்றார்கள். அவள் பாடசாலை செல்லும் பாதையில் உள்ள பற்றைக் காட்டுக்குள் கொடூரமான முறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வான கோலத்தில் வித்தியாவின் உடல் இனங்காணப்படுகின்றது.
வித்தியாவின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புங்குடுதீவு பாடசாலை மாணவர்கள் போராட்ம் நடத்துகின்றார்கள். அன்று மாலையே வித்தியா கொலை சம்பவத்துடன் தொடர்புடைய புங்குடுதீவு 9 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த சகோதரர்களான பூபாலசிங்கம் இந்திரகுமார் (வயது 40), பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 34), பூபாலசிங்கம் தவக்குமார் (வயது 32) ஆகிய மூவர் கைது செய்யப்படுகின்றனர்.

15.05.2015 – வெள்ளிக்கிழமை
பிரேத பரிசோதணையில் வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டமை உறுதிபடுத்தப்படுகின்றது.
வித்தியாவின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீவகம் முழுவதும் ஹர்த்தால். மதியமே வித்தியாவின் உடலும் அடக்கம் செய்யப்படுகின்றது.

17.05.2015 ஞாயிற்றுக்கிழமை
வித்தியா கொலை தொடர்பில் மேலும் 5 பேர் கைது. கைது செய்யப்பட்டவர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி பொது மக்கள் ஆர்ப்பாட்டம். குறிகாட்டுவான பொலிஸ் போஸ் உடைப்பு. சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து மக்கள் தாக்குதல் நடத்துகின்றார்கள்.

18.05.2015 – திங்கட்கிழமை
சுவிஸ்குமார் யாழ்.பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்படுகின்றார்.

19.05.2015 – செவ்வாய்க்கிழமை
தப்பிச் சென்ற சுவிஸ்குமார் வெள்ளவத்தையில் வைத்து மீண்டும் பொலிஸாரினால் கைது

20.05.2015 – புதன் கிழமை
யாழ்.நீதிமன்ற கட்டத் தொகுதி மீது தாக்குதல். இத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 127 பேர் உடன் கைது. ஆவசர நிலையினை அடுத்து மாலை பொலிஸ்மா அதிபர் இலங்ககோன் யாழ்.வருகை.

21.05.2015 – வியாழக்கிழமை
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் சுவிஸ்குமார் முன்னிலை. நீதிமன்ற தாக்குதலை எதிர்த்து வடக்கு சட்டத்தரணிகள் நீதிமன்ற அமர்வுகளை புறக்கணித்து போராட்டம்.

22.05.2015 – வெள்ளிக்கிழமை
பிரதம நீதியரசர், பொலிஸ்மா அதிபர் யாழ்.வருகை. உயர் பொலிஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்.

26.05.2015 – செவ்வாய் கிழமை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்.வருகை. வித்தியாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகின்றார். விசேட நீதிமன்றம் அமைத்து வித்தியா வழக்கினை விசாரணை செய்வதாகவும் உறுதியளிக்கின்றார்.

27.05.2015 – புதன் கிழமை
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக மா.இளஞ்செழியன் நியமிக்கப்படுகின்றார்.

03.03.2016 – வியாழக்கிழமை
வித்தியா கொலை வழக்கின் 11 ஆவது சந்தேக நபரான உதயசூரியன் சுரேஷ்கரன் கைது.

04.05.2016 – புதன்கிழமை
ஊர்காவற்துறை நீதிமன்றுக்கு வெளியில் வைத்து சுவிஸ் குமாரின் மற்றும் துஷாந்தனின் ஆகியோரின் தாய்மார் தன்னை மிரட்டியதாக வித்தியாவின் தாய் ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு.

18.05.2016 – புதன்கிழமை
ஒரு வருடத்திற்கு பின்னர் வித்தியா கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கையை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு ஊர்காவற்றுறை நீதிமன்றில் சமர்ப்பித்தனர். சுவிஸ்குமாரின் தாய் சிறைச்சாலையில் உயிரிழந்தார்.

22.02.2017 – புதன்கிழமை
வித்தியா கொலை வழக்கின் 11 ஆவது சந்தேக நபர் அரச தரப்பு சாட்சியமாக மாறுவதற்கு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் ஒப்புதல்.

12.05.2017 – வெள்ளிக்கிழமை
வித்தியா கொலை வழக்கு குற்றபகிர்வு பத்திர வழக்கெடுகள் யாழ். மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டது. அதனை அடுத்து குறித்த வழக்கெடுகளை இரும்பு பொட்டகத்தில் வைத்து பாதுகாக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பதிவாளருக்கு பணிப்புரை.

30.06.2017 – வெள்ளிக்கிழமை
புpரதம நீதியரசரினால் வித்தியா கொலை வழக்கினை விசாரணை செய்வதற்கு அமைக்கப்பட்ட ரயல் அட் பார் மன்றிற்கு 3 தமிழ் பேசும் நீதிபதிகள் நியமனம்.

28.06.2017 – புதன்கிழமை
ரயல் அட் பார் மன்றின் விசாரணைகள் ஆரம்பம். வழக்கின் தொடக்க உரை பதில் சட்டமா அதிபர் டிபிள்யூ.டி.லிவேறா ஆற்றுகின்றார். தனது உரையில் வழக்கின் பிரதான சூத்திரதாரி சுவிஸ்குமார் என்று தெரிக்கின்றார். அன்று வித்தியாவின் தாயாரும் மன்றில் சாட்சியம் வழங்குகின்றார்.

29.06.2017 – வியாழக்கிழமை
வழக்கின் கண்கண்ட சாட்சியான உதயசூரியன் சுரேஸ்கரன் சாட்சியம்.

30.06.2017 – வெள்ளிக்கிழமை
வவுனியா சிறைக் கைதி இப்லார் சாட்சியம்.

03.07.2017 – திங்கட்கிழமை
மரவனு மற்றும் தொழில்நுட்ப ஆய்வறிக்கைகள் மன்றில் சமர்ப்பிப்பு. வித்தியாவின் பாடசாலை மாணவர்கள் இருவர் சாட்சியம்.

04.07.2017 – செவ்வாய்கிழமை
கொழும்பு பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் வி.ரி.திமிழ்மாறன் சாட்சியம்.

05.07.2017 – புதன்கிழமை
வித்தியாவின் சடலத்தை பரிசோதணை செய்த யாழ்.போதனா வைத்திய சாலையின் சட்டவைத்திய அதிகாரி யூ.மயூரதன் சாட்சியம்.

13.07.2017 – வியாழக்கிழமை
சுவிஸ்குமார் தப்பிய விவகாரம் தொடர்பில் ஒரு மாதத்திற்குள் விளக்கமறிக்கமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் முன்னாள் வடமாகாண சிரேஸ்ர பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவிடம் குற்றப் பத்திரம் சமர்ப்பிப்பு.

15.07.2017 – சனிக்கிழமை
முன்னாள் வடமாகாண சிரேஸ்ர பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்க கைது.

20.07.2017 – வியாழக்கிழமை
குற்றப் புலனாய்வு திணைக்களனத்திள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியகமகே சிசிர சிசேரா மன்றில் சாட்சியம்.

02.08.2017 – திங்கட்கிழமை
வித்தியா கொலை வழக்கின் பிரதான விசாரணை அதிகாரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கூட்டுக் கொள்ளை பிரிவின் பொறுப்பதிகரி நிஷாந்தசில்வா சாட்சியம்.

03.08.2017 – செவ்வாய்செவ்வாய்
ஜீன்டெக் நிறுவனத்தின் சிரேஸ்ர விஞ்ஞானி றுவான் இளயப்பெரும சாட்சியத்துடன், வழக்குத் தொடுணர் சாட்சியங்கள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

08.08.2017 – செவ்வாக்கிழமை
சுவிஸ்குமார் தப்பிய வழக்கில் அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவு.

28.08.2017 – திங்கட்கிழமை
ஏதிரி தரப்பு சாட்சியம் ஆரம்பம். சாட்சியத்தில் இராணுவம் மற்றும் கடற்படையே வித்தியாவை வன்புணர்வு செய்து கொலை செய்ததாக குற்றச்சாட்டு.

29.08.2017 – செவ்வாய்செவ்வாய்
சுவிஸ்குமாருடைய சாட்சியத்துடன் எதிரி தரப்பு சாட்சியங்கள் முடிவு.

12.09.2017 – செவ்வாக்கிழமை
வுழக்குத் தொடுணர் சார்பில் பிரதி சொலிஸ் ஜென்ரல் குமார்ரட்ணம் தொகுப்புரை.

13.09.2017 – புதன்கிழமை
ஏதிரி தரப்பு சட்டத்தரணிகள் தொகுப்புரை. வழக்கு இன்று 27 ஆம் திகதி புதன்கிழமை வரை தீர்ப்புக்காக ஒத்திவைப்பு.