வித்தியாவின் சகோதரிக்கு ஜனாதிபதியால் நியமனக்கடிதம் வழங்கிவைப்பு!!

படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி வித்யா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான யாழ். பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அவர் தனது நியமனத்தை நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

கடந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வவுனியாவிற்கு சென்றிருந்த வேளையில் மாணவி வித்தியாவின் வீட்டிற்குச் சென்று அக்குடும்பத்தினரின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார்.

இதன்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு ஏற்ப இந்த நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவி வித்தியாவின் தாயாரான சரஸ்வதி சிவலோகநாதன் மற்றும் வித்யா சிவலோகநாதன் மன்றத்தின் தலைவி பிரபல திரைப்பட கலைஞர் சுவினீதா வீரசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த மாணவி வித்யா கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் படுகொலை செய்யப்பாட்டார்.

இந்த கொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், இருவர் விடுதலை செய்யப்பட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]