வித்தியாசமான மீன் பஜ்ஜி செய்வது எப்படி?

வித்தியாசமான மீன் பஜ்ஜி செய்வது எப்படி?

நாம் அனைவரும் வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி என பஜ்ஜிகள் சாப்பிட்டிருப்போம். இன்று வித்தியாசமான மீனில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

முள் இல்லாத துண்டு மீன் – முக்கால் கிலோ
மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
சோள மாவு – ஒரு கைப்பிடி அளவு
கடலை மாவு – இரு கைப்பிடி அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை பழச்சாறு – தேவையான அளவு

செய்முறை

மீனை நன்றாக கழுவி வைக்கவும். கழுவிய மீனை எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், மிளகாய்த் தூளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.

எண்ணெய் காய்ந்ததும் மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். இதோ சுவையான மீன் பஜ்ஜி தயார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]