விண்வெளியை துல்லியமாகப் படம்பிடிக்கக்கூடிய நவீன தொலைநோக்கி ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் விண்வெளியை பல மடங்கு துல்லியமாக படம்பிடிக்க முடியும் எனவும், இந்த நவீன தொலைநோக்கி சிலி நாட்டில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியாக அமையும் இந்த ‘ஜெயன்ட் மெக்கல்லன் டெலஸ்கோப்’, எதிர்வரும் 2024-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என கூறப்படுகிறது.
இதைப் பயன்படுத்தி, விண்ணியல் ஆய்வாளர்களால் பண்டைய பிரபஞ்சம் மற்றும் வேற்றுக்கிரக உயிர்கள் பற்றி ஆராய முடியும் என நம்பப்படுகிறது.
இந்த புதிய தொலைநோக்கியின் எடை 2 மில்லியன் பவுண்டாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிற அதேநேரம் அட்டகாமா பாலைவனத்தில் உள்ள லாஸ் காம்பானஸ் ஆய்வகத்தில், புதிய தொலைநோக்கி சார்ந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]