விண்ணை தொடும் அளவுக்கு சென்ற 2.0 புரோமோஷன் – படங்கள் உள்ளே

ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் புதிய படம் ‘2.ஓ’.  இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் இப்படத்தில் பாலிவுட் அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புரோமோஷன்களை மிகவும் பிரம்மாண்டமாக செய்ய படக்குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி, 100 அடி உயர வெப்பக்காற்று பலூன்களில் இப்படத்தின் புரோமோஷன்களை செய்யவும் முடிவு செய்தனர்.

அதற்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கியிருந்தனர். இந்நிலையில், வெப்பக்காற்று பலூனில் 2.ஓ படத்தின் விளம்பரங்களை அச்சடிக்கும் பணி முடிவடைந்து, பலூனும் பறப்பதற்கு தயாராகிவிட்டது.

தற்போது, பலூனை பறக்கவிடுவதற்கு முன்பாக ஒரு முன்னோட்டம் நடத்தியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தற்போது, இப்பலூன்களை பறக்கவிட வானிலை மையத்தின் அனுமதிக்காக படக்குழுவினர் காத்துக் கொண்டிருப்பதாகவும், அனுமதி கிடைத்த பின்னர், இப்பலூன்களை பறக்கவிட ஏற்பாடுகள் நடக்கும் என்றும் தெரிகிறது. ‘2.ஓ’ படத்தை ஜனவரியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]